கருப்பு பூஞ்சையில் மனைவி உயிரிழப்பு: மனமுடைந்து குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட தந்தை...

கர்நாடக மாநிலத்தில் கருப்பு பூஞ்சையிலால் பாதிக்கப்பட்ட மனைவி இறந்ததால், மனமுடைந்த கணவன் சின்னஞ்சிறு குழந்தைகளையும்  கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருப்பு பூஞ்சையில் மனைவி உயிரிழப்பு: மனமுடைந்து குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட தந்தை...

கர்நாடக மாநிலம் பெல்காவி மாவட்டம் ஹுக்கேரி  தாலுகா போரகல்  கிராமத்தைச் சேர்ந்தவர் கோபால். இவருக்கு  ஜெயஸ்ரீ என்ற மனைவியும் மூன்று மகள் மற்றும் ஒரு மகனும் இருந்தனர். இந்நிலையில்  46 வயதான ஜெயஸ்ரீ கடந்த ஜூலை மாதம் பெருந்தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை முடிந்து பின் கருப்புபூஞ்சை நோய்க்கு பலியானார். இதனால் மனைவி இறந்த துக்கத்தில் கோபால் மற்றும் குழந்தைகள் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அதிகாலை தனது குழந்தைகளான 19 வயதான சௌமியா 16 வயதான ஸ்வேதா, 11 வயதான சாக்ஸி 8 வயதான சுர்ஜன் ஆகியோருக்கு தண்ணீரில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம்  தொடர்பாக சங்கேஸ்வரர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.