மத அரசியலை கைவிடுமா பாஜக.....பாடப்புத்தகத்தில் வேதங்கள் தேவையா?!!!

மத அரசியலை கைவிடுமா பாஜக.....பாடப்புத்தகத்தில் வேதங்கள் தேவையா?!!!

ராமாயணம், மகாபாரதம், வேதங்கள் உள்ளிட்டவை பள்ளி மாணவர்களின் புத்தகங்களில் இடம்பெறும்.

ராமாயணம், மகாபாரதம், வேதங்கள் உள்ளிட்டவை பள்ளி மாணவர்களின் புத்தகங்களில் இடம்பெறும் என மத்தியப்பிரதேச முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.  போபாலில் நடைபெற்ற  நிகழ்வு ஒன்றில்  பேசிய அவர், இந்தியா என்பது ராமரின் பெயரால் நினைவு கூறப்படுவதாக தெரிவித்துள்ளார். 

ஆனால் தற்போது நாட்டின் மாண்புகளை சீர்குலைக்கும் வகையில், ஆன்மீகம், மதம், கலாசாரத்தை சிலர் விமர்சித்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.  மனுஸ்மிருதி உள்ளிட்ட புத்தகங்கள் தலித் மற்றும் பெண்களுக்கு எதிராக நாட்டில் வெறுப்புணர்வைத் தூண்டுவதாக பீகார் கல்வித்துறை அமைச்சர் சந்திரசேகர் சமீபத்தில் விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

முதலமைச்சரின் அறிவிப்பைத் தொடர்ந்து மத அரசியலை எப்போது கைவிட போகிறது பாஜக என்ற விமர்சனம் அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  14 வயதிற்குட்பட்ட சிறுமிகளை திருமணம் செய்தால்....