இன்றாவது முழுமையாக நடைபெறுமா நாடாளுமன்றம் ?

இன்றாவது முழுமையாக நடைபெறுமா நாடாளுமன்றம் ?

நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கிய முதல்நாளில் இருந்து இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டு வரும் நிலையில், இன்றாவது முழுமையாக நடைபெறுமா என கேள்வி எழுந்துள்ளது.

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ம் அமர்வு, கடந்த 13ம் தேதி தொங்கிய நிலையில், தொடர்ந்து 3 நாட்களாக இந்தியாவில் ஜனநாயகம் கேள்விக்குறியாகியுள்ளதாக லண்டனில் ராகுல்காந்தி பேசியது தொடர்பாக பாஜக அமைச்சர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்தனர்.

இதையும் படிக்க : எதிர்கட்சிகளை முடக்கவே பொய் வழக்கு தொடுக்கப்படுகின்றன - செங்கோட்டையன் குற்றச்சாட்டு!

அதேபோல் எதிர்கட்சிகளும் அதானி குழும விவகாரம் தொடர்பாக கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டன. இதனால் தொடர்ந்து 3 நாட்களாக இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

இந்நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட வேண்டிய கேள்விகள் தொடர்பாக, மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் எதிர்கட்சி எம்பிக்கள் ஆலோசனையில் ஈடுபடுகின்றன. இந்த சூழ்நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்றைக்காவது நடைபெறுமா என கேள்வி எழுந்துள்ளது.