புதிய கல்வி கொள்கை மட்டும் தான் தரமான கல்வி வழங்குமா?!!!

தேசிய கல்வி கொள்கை மூலம் அனைவருக்கும் மிகவும் தரமான கல்வியை கொடுத்து வருகிறோம் - ஐ.ஐ.டி இயக்குனர் காமகோடி ஜி- 20 கல்வி கருத்தரங்கில் உரையாற்றினார்.
புதிய கல்வி கொள்கை மட்டும் தான் தரமான கல்வி வழங்குமா?!!!
Published on
Updated on
1 min read

ஐஐடி பல்கலைக்கழகத்தின் இயக்குனர் காமகோடி பேசுகையில்,ஆஸ்திரேலியா, சீனா, நெதர்லாந்து உள்ளிட்ட  நாடுகள் டிஜிட்டல் கல்வியில் சிறந்து விளங்குகிறது என்றும்,பிரான்சில் ஆங்கிலத்தில் பாடம் நடத்தினாலும் பிரான்ஸ் மொழியில் மொழிபெயர்க்கும் கருவிகள் பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்ப வளர்ச்சி:

இதற்காக அந்த நாடு பெரும் தொகையை செலவழிக்கிறது என கூறிய அவர், சீனா,நெதர்லாந்து,பிரான்ஸ், ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் காணொலி வாயிலான வகுப்பறைகளை அதிக அளவில் உருவாக்கி வருவதாகவும், தொழில்நுட்ப வளர்ச்சி மூலம் அந்த நாடுகளில் அனைவருக்கும் கல்வி தங்கு தடை இன்றி வழங்கப்படுகிறது என்றும் குறிப்பிட்டார்.

கொரோனா தொற்று:

தென் ஆப்பிரிக்கா மொரிசியஸ் போன்ற நாடுகளும் தங்களது கல்வி கட்டமைப்புகளை மேம்படுத்த தீவிரம் காட்டி வருவதாக கூறிய அவர், கொரோனா பெருந்தொற்று கல்விக்கு பெரும் சவாலாக இருந்தது என்றும், அந்த நேரத்தில் அனைவருக்கும் கல்வி வழங்கும் கருவியாக தொழில் மட்டுமே விளங்கியதாகவும் தெரிவித்தார்.

உயர்கல்விக்கான தளம்:

இங்கிலாந்து ஆராய்ச்சி படிப்புகளை மேம்படுத்துவதற்கு பெருமளவில் நிதி ஒதுக்கி வருகிறது என்றும், சீனா 20 ஆயிரத்துக்கும் அதிகமான உயர்கல்வி பாடத்திட்டங்களை கொண்டதாக உள்ளது, உயர்கல்வி படிக்கும் தளமாக சீனா மாறி வருவதாகவும் அவர் கூறினார்.

கல்வி சென்று சேர்வதில்:

நெதர்லாந்து மென்பொருள் கல்வியில் அதிக கவனம் செலுத்தி வருவதாக கூறிய அவர்,
பிரான்ஸ் தொழில் முனைவோர் தொடர்பான கருத்தரங்கு பயிற்சி வகுப்புகளை அதிக அளவில் நடத்தி வருகிறது என்றும்,இந்தியா பல்வேறு உயர் கல்வி நிறுவனங்களை உருவாக்கி வருவதோடு, தொழில்நுட்பக் கல்வி மையமாக இந்திய மாறி உள்ளதாகவும், பெரும்பாலான உயர் கல்வி நிறுவனங்கள் சுயநிதி கல்லூரிகளாக உள்ளதால், அனைவருக்கும் கல்வி சென்று சேர்வதில் சிரமம் உள்ளது. 

புதியக் கல்வி கொள்கை:

ஆஸ்திரேலியா சீனா போன்ற நாடுகள் ஸ்மார்ட் எஜுகேஷன் திட்டங்களை ஊக்குவித்து வருகின்றன அதிக அளவில் கல்வியை டிஜிட்டல் மயமாக்கி வருவதாகவும், நெதர்லாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளும் டிஜிட்டல் கல்வியை ஊக்குவித்து வருகின்றது என்றும், அதே போல இந்தியா புதிய கல்விக் கொள்கை மூலம் அனைவருக்கும் சமமான தரமான கல்வியை கொடுத்து வருகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com