காதலனுக்கு ஒரே ஒரு மெசேஜ்! ஒட்டு மொத்த விமானமும் 6 மணி நேரம் தாமதம்!

இண்டிகோ விமானத்தில் பயணித்த ஒருவக்கு, அவர் காதலர் அனுப்பிய பிரைவேட் மெசேஜ் காரணமாக அந்த விமானம் 6 மணி நேரம் நிறுத்தப்பட்டுள்லது. இச்சம்பவம் பெரும் பரபரப்பாகியுள்ளது.
காதலனுக்கு ஒரே ஒரு மெசேஜ்! ஒட்டு மொத்த விமானமும் 6 மணி நேரம் தாமதம்!
Published on
Updated on
2 min read

ஒருவர் நம் அருகில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது, பேச தயக்கமாக இருந்தால், என்ன செய்வோம்! பொதுவாக ஜன்னல் பக்கம் அமர்ந்தால் வேடிக்கை பார்ப்போம். அல்லது, கையில் ஏதாவது தின்பண்டம் இருந்தால், அமைதியாக சாப்பிட்டு பயணம் செய்ய வேண்டும், அதை விட்டு, அருகில் இருப்பவர்கள் என்ன செய்கிறார்கள், அவர்கள் போனில் என்ன பார்க்கிறார்கள், யாரிடம் மெசேஜ் செய்துக் கொண்டிருக்கின்றனர் என்றெல்லாம் நோண்டினால், இப்படித்தான் நடக்கும்.

மங்களூரு சர்வதேச விமான நிலையத்தில், இண்டிகோ விமானத்தில் பயணிக்க இருந்த ஒருவருக்கு, அவரது காதலி, தனது சொந்த போனில் மெசேஜ் அனுப்பியதை எட்டிப் பார்த்த பக்கத்து சீட்டுக்காரர், ஒரு பெரிய குழப்பத்தை உருவாக்கி, விமானத்தை பயணம் செய்ய விடாமல், சுமார் 6 மணி நேரம் விமானத்தை நிறுத்தி வைத்திருக்கிறார். அப்படி என்ன தான் அந்த மெசேஜ் என்பதைப் பார்க்கலாம்.

மங்களூருவில் இருந்து மும்பை செல்லும் இண்டிகோ விமானம், 12 மணியளவில், புறப்படுவதற்கு ரன்வேவில் நுழையும் போது, பயணி ஒருவர் தனது தோழியுடன் வாட்சாப்பில் மெசேஜ் செய்துக் கொண்டிருந்தார். அவரைப் போலவே, அதே விமான நிலையத்தில் பெங்களூரு விமானத்திற்கு காத்துக் கொண்டிருந்த அந்த தோழியுடன் பேசிக் கொண்டிருக்கும் போது, அந்த பெண், பயணிக்கு, “You're a BOMBER" என்று மெசேஜ் அனுப்பியுள்ளார். அதாவது வெடிகுண்டு வீசுபவர் என அது குறிக்கிறது.

இதனை, அந்த பயணியின் பக்கத்து சீட்டில் இருப்பவர் எட்டிப் பார்த்து, விமான ஊழியரிடம் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து வந்த விமான நிலைய அதிகாரிகள், ஒரு வேளை இருக்குமோ என்ற பதட்டத்தில் விமானத்தை அப்படியே ஒராங்கட்டி, விமானத்தில் இருந்த 186 பயணிகளையும் இறக்கி, அவர்களது பைகளை, தனித்தனியே சோதனையிட்டுள்ளனர்.

அது மட்டுமின்றி, அந்த பயணியையும், அவருக்கு அந்த மெசேஜை அனுப்பிய பெண்ணையும், அதிகாரிகள் தனியாக அழைத்துச் சென்று பல மணி நேரம் விசாரணை செய்துள்ளனர். தோண்டி துருவி செய்த விசாரணையில், அது வெறும் கிண்டல் தான் என்பது தெரியவந்துள்ளது. பின், அவர்கள் விடுவிக்கப்பட்டன. இந்த அமுளி குமிளியின் காரணமாக, அந்த பெண்ணும் தனது விமானத்தை தவற விடும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

பின், ஏர் டிராபிக் கன்ட்ரோலர் (ஏடிசி) க்கு தெரிவிக்கப்பட்டு, புறப்பட இருந்த விமானம் மீண்டும் வளைகுடாவிற்கு திரும்பியது. விமானம் ரன்வேவில் இருந்து புறப்படும் முன் இந்த சம்பவம் நிகழ்ந்ததை அடுத்து, விமானம் 6 மணி நேரம் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால், ஆதாரங்கள் படி, அவர்கள் முன்பில் இருந்தே பேசி சிரித்து, அரட்டை அடித்துக் கொண்டிருந்தது விமான நிலைய சிசிடிவி காட்சிகள் உட்பட அனைத்தும் வெளிப்படையாகக் காட்டியதால் அவர்கள் தப்பித்ததன் என தகவல்கள் கூறுகின்றன.

இந்த சம்பவம், ஆகஸ்ட் 15, அதாவது இந்தியா தனது 75வது சுதந்திர ஆண்டைக் கொண்டாடும் போது நடந்ததால் தான் பெரும் பரபரப்பாகியாதாக, அதிகாரிகள் தெரிவிக்கின்றன. ஒரு மெசேஜ் எங்கு அனுப்புகிறோம், யாருக்கு எப்போது அனுப்புகிறோம் என்பதை நாம் எவ்வளவு கவனமாக பார்க்க வேண்டும் என இதில் இருந்தே தெரிகிறது.!!!

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com