மத்திய அமைச்சர் டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்டதற்கு எழுத்து பூர்வ விளக்கம்

மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மற்றும் சசி தரூரின் டிவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டது குறித்து டிவிட்டர் நிறுவனம் எழுத்து பூர்வமாக விளக்கமளித்துள்ளது.

மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தின் தனிப்பட்ட டிவிட்டர் கணக்கு கடந்த மாதம் ஒரு மணி நேரத்திற்கு மேல் முடக்கப்பட்டது. பின் மீண்டும் செயல்பாட்டு வந்தது. இதேபோல் காங்கிரஸ் எம். பி சசி தரூரின் டிவிட்டர் கணக்கும் அதேநாளில் முடக்கப்பட்டு பின் மீண்டும் சரி செய்யப்பட்டது.

இந்த நிலையில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மற்றும் சசி தரூரின் டுவிட்டர் கணக்குகள் எதன் அடிப்படையில் முடக்கப்பட்டது என்பது குறித்து டுவிட்டர் நிறுவனம் எழுத்துபூர்வ விளக்கமளிக்க வேண்டும் என மத்திய அரசு கோரியிருந்தது.

இதையடுத்து தனது எழுத்து பூர்வமான விளக்கத்தை சமர்பித்துள்ள டுவிட்டர் நிறுவனம் அமெரிக்க டிஜிட்டல் மில்லினியம் பதிப்புரிமைச் சட்டத்தின் கீழ் காப்புரிமை மீறப்பட்டதன் அடிப்படையிலேயே டிவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டதாக விளக்கமளித்துள்ளது.