கழிவுநீரில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ.. பரபரப்பு!!

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ கோட்டம்ரெட்டி ஸ்ரீதர் ரெட்டி கழிவுநீரில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

கழிவுநீரில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ.. பரபரப்பு!!

ஆந்திர மாநிலம் நெல்லூரில், ரயில்வே தண்டவாளம் அருகே நீண்ட நாட்களாக நிரம்பி வழியும் கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்யாமல் இருந்து வந்துள்ளது. இதனால் அதில் இருந்து துர்நாற்றம் வீசுவதோடு, கொசுத்தொல்லையால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில், உம்மா ரெட்டி குண்டாவில் ஆந்திராவின் உம்மா ரெட்டி குண்டாவில் நீண்ட நாட்களாக நிரம்பி வழியும் கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்யாத அதிகாரிகளை கண்டித்து, நெல்லூரைச் சேர்ந்த ஒய்.எஸ்.ஆர்.சி. கட்சியின் எம்.எல்.ஏ. கோட்டம்ரெட்டி ஸ்ரீதர் ரெட்டி, கழிவுநீரில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு சூழல் ஏற்பட்டது.

பிறகு இது குறித்து பேசிய அவர், இதனை சுத்தம் செய்ய அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் அவர்கள் செவிசாய்க்கவில்லை.. உம்மா ரெட்டி குண்டா பகுதி மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது என்றார்.

இதனை உடனே சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக உறுதி அளிக்கவேண்டும் என கூறிய அவர், சுத்தம் செய்ய தவறினால் மீண்டும் கழிவுநீர் கால்வாயில் உட்காருவேன் என்றும் கூறினார்.

ரெட்டியின் போராட்டம் குறித்த தகவல் கிடைத்ததும், ரயில்வே மற்றும் குடிமைப்பணித்துறை அதிகாரிகள் அப்பகுதிக்கு விரைந்து வந்து, அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தி  பத்து நாட்களுக்குள் தீர்வு காண்பதாக உறுதியளித்தனர்.

சுமார் 10 ஆண்டுகளாக ரயில்வே மற்றும் குடிமைப்பணித்துறை அதிகாரிகள் இருவரும் இப்பிரச்னையில் அலட்சியம் காட்டி வருகின்றனர் என்றார் எம்எல்ஏ கோட்டம்ரெட்டி ஸ்ரீதர் ரெட்டி.