ஒடிசாவில் மீண்டும் தடம்புரண்ட ரயில்...விளக்கமளித்த கிழக்கு ரயில்வே!

ஒடிசாவில் மீண்டும் தடம்புரண்ட ரயில்...விளக்கமளித்த கிழக்கு ரயில்வே!
Published on
Updated on
1 min read

ஒடிசாவின் பர்கரில் மற்றுமொரு சரக்கு ரயில் தடம் புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
கடந்த 2ம் தேதி ஒடிசாவின் பாலசோரில் 3 ரயில்கள் விபத்துக்குள்ளானதில் 275 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தொடர்ந்து மீட்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்து, அப்பகுதியில் இன்று முதல் ரயில்சேவை தொடங்கப்பட்டது. 

இந்நிலையில் ஒடிசாவின் பர்கரின் மெந்தபாலி அருகே தனியார் சிமெண்ட் தொழிற்சாலைக்குச் சொந்தமான சரக்கு ரயிலின் 5 பெட்டிகள் இன்று தடம்புரண்டன. இதில் உயிர்சேதம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், சரக்கு ரயில் முழுக்க முழுக்க தனியார் நிறுவனத்தால் பராமரிக்கப்படுவதாக கிழக்கு  ரயில்வே விளக்கமளித்துள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com