டைம்டேபிள் போட்டு 2 மனைவிகளுடன் வாழ்ந்து வரும் கணவன்...வார கடைசியில் மட்டும் லீவாம்...!

டைம்டேபிள் போட்டு 2 மனைவிகளுடன் வாழ்ந்து வரும் கணவன்...வார கடைசியில் மட்டும் லீவாம்...!

ஹரியானா மாநிலத்தில் கணவர் ஒருவர் டைம்டேபிள் போட்டு தன் 2 மனைவிகளுடன் குடும்பம் நடத்தி வருவதாக செய்தி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீப காலமாகவே, ஒரு ஆண்மகன்  2, 3  என நிறைய மனைவிகளுடன் வாழ்ந்து வருவதாக வெளியாகும் செய்தியை படித்து வருகிறோம். அதேபோன்று ஒரு செய்தி தற்போது வெளியாகியுள்ளது. ஆனால், இது கொஞ்சம் வித்தியாசமான செய்தி என்றே சொல்லலாம். ஏனென்றால், கணவர் ஒருவர் தனது 2 மனைவிகளுடன் டைம்டேபிள் போட்டு வாழ்ந்து வருகிறார்.

ஹரியானா மாநிலம் குருகிராமில் பொறியாளராக பணியாற்றி வரும் நபர் ஒருவர், கடந்த 2018 ஆம் ஆண்டு சீமா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ள நிலையில், கணவர் தன்னுடன் வேலை பார்த்த பெண்ணுடன் திருமணம் மீறிய உறவில் இருந்து வந்துள்ளார். 

நாளடைவில் இவர்கள் இருவரும் திருமணம் செய்துக்கொண்ட  நிலையில், ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. இதனையடுத்து, கணவரின் இரண்டாவது திருமணம் பற்றி அறிந்த முதல் மனைவி சீமா, கணவர் மீது வழக்கு பதிவு செய்து, தனது மகனை வளர்க்க தேவைப்படும் செலவை ஏற்குமாறு கோரிக்கை வைத்திருந்தார்.

ஆனால், முதல் மனைவியின் கோரிக்கையை ஏற்காத கணவர், வேறு வழியை பார்த்து கொள்ளுமாறு கூறிவிட்டார். இதனால் இவர்கள் இருவரும் கவுன்சிலிங் சென்றனர். அப்போது, விவாகராத்துக்கு பதிலாக ஒரு வித்தியாசமான நிபந்தனை ஒன்று கணவருக்கு விதிக்கப்பட்டது.

அந்த நிபந்தனையின்படி, கணவர் வாரத்தின் முதல் 3 நாட்களான திங்கள் முதல் புதன்கிழமை வரை, முதல் மனைவி மற்றும் குழந்தையுடனும், வியாழன் முதல் சனிக்கிழமை வரை இரண்டாம் மனைவி மற்றும் குழந்தையுடனும் இருக்க வேண்டும். ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டும் அவரது விருப்பம் போல் ஜாலியாக வாழ்ந்து கொள்ளலாம் என ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன்காரணமாக, அந்த நபர் தனது இரண்டு மனைவிகளுடனும் டைம்டேபிள் போட்டுக் கொண்டு வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com