மல்யுத்த வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய டெல்லி காவல் துறையை கண்டித்து நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம்...!

மல்யுத்த வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய டெல்லி காவல் துறையை கண்டித்து நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம்...!
Published on
Updated on
1 min read

மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜக எம்.பி'ஐ கைது செய்ய வலியுறுத்தி ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜக எம்.பி பிரஜன் பூஷன் சரண்சிங்கை கைதுசெய்யக் கோரி போராட்டம் நடத்திய மல்யுத்த வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய டெல்லி காவல் துறையை கண்டித்து நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. 

ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் நடத்தப்பட்ட இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேர்ப்பட்டோர் கலந்து கொண்டு, ஒன்றிய அரசுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி கோசங்களை எழுப்பினர். 

மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் இன்று போராட்டம் நடைபெற்று வருவதாகவும், பாஜகவின் சனாதான கருத்துகளை முறியடித்து ஒன்றிய அரசை தோற்கடிக்கும் வகையில் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜக எம்.பி பிரஜன் பூஷன் சரண்சிங்கை கைது செய்யவேண்டும் என்றும், பாஜக எம்.பி'ஐ கைது செய்யும் வரை எங்களின் போராட்டம் தொடரும் என்றும் மாநில ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் ஒருங்கினைப்பாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com