ஆளுநரைக் கண்டித்து பேரணி என முதலமைச்சர் அறிவிப்பு!
பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை கண்டித்து ராஜ்பவன் வரை அமைதி பேரணி நடைபெறும் என முதலமைச்சர் பகவந்த் மான் அறிவித்துள்ளார்.
ஆம் ஆத்மி அரசு
பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான அரசை கவிழ்க்க ஆபரேசன் தாமரை திட்டத்தை பாஜக செயல்படுத்தி வருவதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டி இருந்தார்.
இதற்கு ஏற்றார் போல், பஞ்சாப் சட்டமன்றத்தில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவிருந்த நிலையில், சட்டமன்ற கூட்டத்திற்கான உத்தரவை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திடீரென திரும்பப் பெற்றார்.
ஆளுநருக்கு எதிராக பேரணி
இதனால் கடும் அதிருப்தியில் இருந்த முதலமைச்சர் பகவந்த் மான், ஆளுநர் மாளிகை நோக்கி அமைதிப் பேரணி நடைபெறும் என அறிவித்துள்ளார். இந்த பேரணியில் ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்கள் 92 பேரும் கலந்து கொள்வார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.