மாத்திரை விற்பனையில் புதிய நடைமுறைகளை புகுத்த ஆலோசனை!

மாத்திரை விற்பனையில் புதிய நடைமுறைகளை புகுத்த ஆலோசனை!

மாத்திரை விற்பனையில் புதிய நடைமுறைகளை புகுத்த உள்ளதாக மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள் துறை தெரிவித்துள்ளது.

மாத்திரை விற்பனையில் புதிய நடைமுறையை கொண்டுவர மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சகம் ஆலோசித்து வருகிறது. மருந்து கடைகளுக்கு செல்லும் நுகர்வோரிடம், முழு அட்டையுடன் மாத்திரைகளை வாங்கும்படி, ஒரு சில கடைக்காரர்கள் வலியுறுத்துவதாகவும், இதனால் நோய்வாய்படுவோருக்கு தேவையில்லாத நிதிச்சுமை ஏற்படுவதாகவும், மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சகத்திற்கு புகார்கள் வந்தன. மேலும் தனித்தனி மாத்திரைகளை வாங்கும் போது அவற்றில் காலாவதி ஆகும் தேதி உள்ளிட்டவை இல்லாததால் சில நேரம் குழப்பங்கள் நிகழ்வதாகவும் புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன.

இந்நிலையில் இதுதொடா்பாக நேற்று டெல்லியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ஒவ்வொரு மாத்திரையையும் சுலபமாக, தனியாக பிரித்து தரும் வகையில் 'பேக்கிங்' செய்ய வலியுறுத்தப்பட்டது. மேலும், ஒவ்வொரு மாத்திரை அட்டைக்கு பின்புறமும், உற்பத்தி மற்றும் காலாவதி தேதியை அச்சிடவும், க்யூ.ஆர்., குறியீட்டைப் பயன்படுத்தவும் பரிந்துரை செய்யப்பட்டது.  மேலும் விரைவில் இதுகுறித்து தீர்வு காணப்படும் எனவும் மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சகம் தொிவித்துள்ளது. 

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com