அக்னிபாத் மேல்முறையீடு...! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு...!!

அக்னிபாத் மேல்முறையீடு...! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு...!!

அக்னிபாத் மேல்முறையீடு மனுக்களை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்த அக்னிபாத் திட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இந்திய ராணுவத்தின் முப்படைகளுக்கும் தற்காலிக அடிப்படையில் இளைஞர்களை தேர்வு செய்யும் அக்னிபாத் திட்டத்தை கடந்த ஆண்டு ஜூன் மாதம் மத்திய அரசு கொண்டு வந்தது.

இந்தத் திட்டம் அரசியல் சாசனத்திற்கு விரோதமானது எனவும் அக்னிபாத் திட்டத்தின் மூலமாக ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பதை தடை செய்ய வேண்டும் என்று தொடரப்பட்ட மனுக்களை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பான மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரித்தபோது, "அக்னிபாத் திட்டம் மத்திய அரசின் கொள்கை முடிவு சம்பந்தமானது" என்று கூறி மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com