கர்நாடகாவில் விமானப்படையின் பயிற்சி விமானம் விபத்து

கர்நாடகாவில் விமானப்படையின் பயிற்சி விமானம் விபத்து

கர்நாடகா: சாமராஜநகரில் அருகே பயிற்சியில் ஈடுபட்டிருந்த விமானம் விபத்துக்குள்ளானது.

இன்று மதியம், சாமராஜநகரில் உள்ள போகபுரா கிராமம் அருகே வழக்கம் போல் இந்திய விமானப்படையின் கிரண் ரக பயிற்சி விமானம் பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. இந்த விமானத்தை தேஜ்பால் மற்றும் பூமிகா ஆகிய விமானிகள் இயக்கினார்கள். 

போகபுரா கிராமம் அருகே சென்றபோது, விமானம் விபத்துக்குள்ளாகி கீழே விழுந்து நொறுங்கியது. விமானம் விபத்துக்குள்ளாவதை அறிந்து சுதாரித்துக்கொண்ட விமானிகள் அதற்கு முன்னரே வெளியேறிவிட்டனர். இதனால் நல்வாய்ப்பாக விமானிகள் உயிர் சேதம் இல்லாமல் தப்பினர். 

சம்பவ இடத்திற்கு வந்த விமானப்படையின் மீட்புக்குழு, விபத்துக்குள்ளான விமானத்தை அப்புறப்படுத்தி விமானிகள் இருவரையும் மீட்டு பெங்களூர் அனுப்பிவைத்தது. 

சம்பவ இடத்தில் திரண்ட பொது மக்கள் விமானத்தை அப்புறப்படுத்த காவலர்களுக்கு உதவினர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com