மன்னிப்பு கோர நான் சாவர்க்கர் இல்லை.....!!

மன்னிப்பு கோர நான் சாவர்க்கர் இல்லை.....!!

அதானி குழும முறைகேடு குறித்த சிறு கேள்விக்கும் பாஜக அரசு பதிலளிக்கத் தயங்குவதாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

சாதாரண குடிமகனாக:

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் காங்கிரஸ் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார்.  அப்போது பேசிய அவர், தகுதி நீக்கம் செய்யப்பட்டாலும் சாதாரண குடிமகனாக சமூக நீதிக்காக தொடர்ந்து போராடுவேன் என்றார்.  

அதானி குழு:

மேலும் அதானி குழும முறைகேடுகள் குறித்து தான் கேள்விகள் கேட்ட பிறகுதான் தன் மீதான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டது என்று கூறிய ராகுல் காந்தி, ஷெல் நிறுவனத்தில் அதானி முதலீடு செய்துள்ள 20 ஆயிரம் கோடி ரூபாய் பணம் யாருடையது என்பதே தனது அடிப்படை கேள்வி என்று கூறினார்.  அதானி குழும முறைகேடு குறித்த சிறு கேள்விக்கும் பாஜக அரசு பதிலளிக்கத் தயங்குவதாகவும் விமர்சித்த ராகுல் காந்தி, தனது பேச்சு பிரதமரை பயமுறுத்துவதாகவும் கூறினார். 

நசுக்கப்படும் குரல்:

தொடர்ந்து பேசிய அவர், மக்கள் குறைகளை விவாதிக்கும் மன்றமான நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரல் நசுக்கப்படுவதாகக் குற்றம்சாட்டினார்.  மேலும், தகுதி நீக்கம், சிறை தண்டனை உள்ளிட்ட அச்சுறுதல்களுக்கு பயப்படாமல் தேசத்திற்கு எதிரான சக்திகளை போராடி முறியடிப்பேன் என்றும் ராகுல் காந்தி திட்டவட்டமாக தெரிவித்தார்.  மன்னிப்பு கோர தான் சாவர்க்கர் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிக்க:  உண்மையான சிங்கங்களாகவும், சாமிகளாகவும் நம் காவல் துறையினர் .... உதயநிதி ஸ்டாலின்!!