மேலும் நீட்டிக்கப்பட்ட காவல்... என்ன செய்யப்போகிறார் டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர்!!

மேலும் நீட்டிக்கப்பட்ட காவல்... என்ன செய்யப்போகிறார் டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர்!!

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக கடந்த 26ம் தேதி கைது செய்யப்பட்ட டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவை, வரும் 20ம் தேதி வரை சிபிஐகாவலில் வைக்க உத்தரவிடப்பட்டிருந்தது.  

மதுபானக் கொள்கை:

டெல்லியில் கடந்த 2021 ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட புதிய மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் துணை முதலமைச்சராக இருந்த மணீஷ் சிசோடியாவை மத்திய புலனாய்வு அமைப்பினர் கடந்த மாதம் 26 ஆம் தேதி கைது செய்தனர்.  இந்த சம்பவம் ஆம் ஆத்மி கட்சி வட்டாரத்தில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.

விசாரணை:

இந்நிலையில் டெல்லி முன்னாள் துணை முதலமைச்சா் மணீஷ் சிசோடியாவின் காவலை மேலும் 5 நாட்கள் நீட்டிக்க சிபிஐ சார்பில் கோரிக்கை வைக்கப்படிருந்தது.  இதையடுத்து, மதுபான கொள்கை ஊழல் முறைகேடு வழக்கில் கைதான டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு 5 நாள் சிபிஐ காவல் வழங்கப்பட்டது.

அதன்படி, ஐந்து நாட்கள் சிபிஐ காவலில் இருந்த அவர், ரௌஸ் அவெனியூ சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.  அங்கு அவரை, மார்ச் 20 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம்  உத்தரவிட்டது.  இந்த உத்தரவின் மூலம், டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு மார்ச் 20 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டிருந்தது.

நீட்டிப்பு:

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வரும் நிலையில், அவரை டெல்லி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி தினமும் விசாரிக்க அனுமதி கோரினர்.  அதனை மறுத்த நீதிமன்றம் மணீஷ் சிசோடியாவின் காவலை மேலும் 5 நாட்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. 

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com