8 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்... குடியரசுத் தலைவர் அறிவிப்பு...

கர்நாடகம் உள்ளிட்ட 8 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளார் குடியரசுத்தலைவர். கர்நாடகா, ஹரியானா, கோவா, மத்தியபிரதேசம், மிசோரம், ஹிமாச்சல பிரதேசம், திரிபுரா, ஜார்கண்ட் ஆகிய 8 மாநிங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து அறிவித்திருக்கிறார் குயரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்.
8 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்... குடியரசுத் தலைவர் அறிவிப்பு...
கர்நாடகத்திற்கு தாவர் சந்த் கெலாட், அரியானாவிற்கு பண்டாரு தத்தாத்ரேயா,  கோவா மாநிலத்திற்கு ஸ்ரீதர் பிள்ளை, மத்திய பிரசதேத்திற்கு மங்குபாய்படேல், மிசோரமிற்கு ஹரிபாபு, ஹிமாச்சல் பிரதேசத்திற்கு ராஜேந்திரன் விஸ்வநாத், திரிபுராவிற்கு சத்யதேவ் நாராயணன், ஜார்கண்ட் ரமேஷ்பயல் ஆகியேரை மாநில ஆளுநர்களாக நியமித்திருக்கிறார் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்.
இதில் கர்நாடகமாநிலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள தாவர் சந்த் கெலாட், அரியானா மாநிலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள பண்டாரு தத்தாத்ரேயா ஆகியோர் மத்திய அமைச்சர்களாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com