நீங்கள் ரயிலில் பயணிக்கிறீர்களா!! இதை தெரிந்து கொள்ளுங்கள்!!

நீங்கள் ரயிலில் பயணிக்கிறீர்களா!! இதை தெரிந்து கொள்ளுங்கள்!!
Published on
Updated on
2 min read

இந்திய ரயில் நெட்வொர்க் நாடு முழுவதும் பரவியுள்ளது. இது உலகின் மிகப்பெரிய ரயில் நெட்வொர்க்குகளில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. இந்திய இரயில்வே மற்ற போக்குவரத்துகளை விட பாதுகாப்பான மற்றும் எளிதான வசதிகளை உடையது. இதனால், தினமும் கோடிக்கணக்கான மக்கள் ரயில்களில் பயணிக்க விரும்புகின்றனர். பயணிகளுக்கு சிறந்த வசதிகளை வழங்குவதற்காக, இந்திய ரயில்வே அவ்வப்போது பல விதிகளை மாற்றிக்கொண்டே இருக்கிறது. அதேசமயம், பயணத்தின் போது பயணிகள் எந்தவிதமான பிரச்னைகளையும் சந்திக்கக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளது.  

தற்போது இதுபோன்ற சூழ்நிலையில், ரயில்வே பல விதிகளை வகுத்துள்ளது. நீங்களும் ரயிலில் பயணம் செய்யப் போகிறீர்கள் என்றால், இந்த விதிகளைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ரயிலில் பயணம் செய்யும் போது இந்த விதிகளை மீறினால் நீங்கள் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்.  இந்திய ரயில்வேயில் பயணம் செய்யும் போது மனதில் கொள்ள வேண்டிய முக்கிய விதிகளைக் குறித்து தெரிந்து கொள்வோம். 

ரயிலில் பயணம் செய்யும் போது, ​​மண்ணெண்ணெய், காய்ந்த புல், அடுப்பு, கேஸ் சிலிண்டர், தீப்பெட்டி, பட்டாசுகள், மண்ணெண்ணெய் போன்ற தீப்பிடிக்கும் பொருள்களை எடுத்துச் செல்லக் கூடாது. இந்த பொருட்களிலிருந்து தீ பரவுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.  ரயிலில் இவற்றை எடுத்துச் செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது. ரயில்களில் தீயை பரப்பும் இவற்றை எடுத்துச் சென்றால் உங்களுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

ரயில்வே வளாகத்தில் புகைபிடிப்பது  தடைசெய்யப்பட்டுள்ளது. அவ்வாறு செய்தால் உங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையுடன் நீங்கள் அபராதமும் செலுத்த வேண்டியிருக்கும். 

ரயிலில் பயணிக்கும் போது தேவையில்லாமல் சங்கிலியை இழுக்கக் கூடாது. தேவையில்லாமல் சங்கிலியை பிடித்து இழுப்பது குற்றம். அவ்வாறு செய்தால் அபராதத்துடன் சிறைத் தண்டனையும் விதிக்கப்படும்.

நீங்கள் ரயிலில் பயணம் செய்யப் போகிறீர்கள் என்றால், இந்த மேற்கூறிய விதிகளைப் பற்றி தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com