100 யூனிட் மின்சாரம் இலவசம்: ராஜஸ்தான்  முதலவர் அசோக் கெலாட் அறிவிப்பு!

100 யூனிட் மின்சாரம் இலவசம்: ராஜஸ்தான் முதலவர் அசோக் கெலாட் அறிவிப்பு!

Published on

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என அம்மாநில முதலவர் அசோக் கெலாட் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்

ராஜஸ்தான்  மாநிலத்தில், சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. தற்போது ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சி ஆட்சியை தக்க வைக்கும் முயற்ச்சியில் இறங்கியுள்ளது. இம்முயற்சியில் முதற்கட்டமாக, முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசம் என முதல்வர் அசோக் கெலாட் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். சமீபத்தில் கர்நாடகாவில் ஆட்சியை கைப்பற்றிய காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளில் இதுவும் ஒன்று ஆகும் . தற்போது தமிழ் நாடு மற்றும் கர்நாடகாவில் இந்த திட்டம் சிறந்த முறையில் நடைமுறையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த திட்டம் மூலம், மக்கள் உபயோகிக்கும் முதல் 100 யூனிட்டிற்கு மட்டும் கட்டணம் செலுத்த தேவை இல்லை. அசோக் கெலாட்டின் இந்த அறிவிப்பு, அம்மாநில மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com