இந்த மாதத்தில் வங்கிகளுக்கு 11 நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், வங்கி தொடர்பான செயல்பாடுகளுக்கு முன்கூட்டியே திட்டமிட்டு கொள்ள வேண்டும் என, பொதுமக்களுக்கு நிதி ஆலோசகர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
பண்டிகை கொண்டாட்டங்கள் நிறைந்த இந்த அக்டோபர் மாதத்தில் மொத்தம் 11 நாட்கள் வங்கிகள் செயல்படாது. அதாவது நாளை காந்தி ஜெயந்தி, 3-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, 9-ம் தேதி 2-வது சனிக்கிழமை, 10-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, 14-ம் தேதி ஆயுதபூஜை, 15-ம் தேதி விஜயதசமி, 17-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, 19-ம் தேதி மிலாடிநபி, 23-ம் தேதி 4-வது சனிக்கிழமை, 24-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, 31-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என 11 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை நாட்கள் ஆகும்.
எனவே பொதுமக்கள் வங்கி தொடர்பான வேலைகளை விடுமுறைக்கு முன்னதாகவே மேற்கொள்ள வேண்டும் என வங்கி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.