வாக்களிக்காத பட்டியலினத்தவரை எச்சிலை நக்க வைத்து தோப்புக்கரணம் போட வைத்த கொடூரம்: தேர்தலில் தோல்வியடைந்தவர் வெறிச்செயல்...

பீகாரில் தேர்தலில் வாக்களிக்காத பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இருவரை, சாலையில் எச்சிலை துப்பி அதை நக்க வைத்த கொடுமைப்படுத்திய நபரின் வீடியோ நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாக்களிக்காத பட்டியலினத்தவரை எச்சிலை நக்க வைத்து தோப்புக்கரணம் போட வைத்த கொடூரம்: தேர்தலில் தோல்வியடைந்தவர் வெறிச்செயல்...
Published on
Updated on
1 min read

பீகார் மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்திற்குட்பட்ட கிராமம் ஒன்றில் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்தது. இதில், போட்டியிட்ட பல்வந்த் சிங் என்பவர் தோல்வியடைந்துள்ளார். இதற்கு, பட்டியலின மக்கள் வாக்களிக்காததே காரணம் என ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில், தனக்கு வாக்களிக்காத பட்டியலினத்தைச் சேர்ந்த இரு நபர்களை அவர் சாலையில் சந்தித்துள்ளார். அப்போது, அவர்களை ஆபாசமாக திட்டி தீர்த்ததுடன், சாலையில் எச்சிலை துப்பி, அதனை இருவரையும் நக்க வைத்துள்ளார். மேலும் காதுகளை பிடித்துக் கொண்டு இருவரையும் தோப்புக்கரணம் போடச் செய்துள்ளார். வாக்களிக்க பணம் தந்தும் இவர்கள் தனக்கு வாக்களிக்கவில்லை என அருகில் இருப்போரிடம் பல்வந்த் சிங் கூறுகிறார்.

இதனை அருகாமையில் இருக்கும் ஒருவர் வீடியோவாக எடுக்க அந்த வீடியோ சமூக வலைத்தளஙக்ளில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த வீடியோ வைரலான நிலையில், பல்வந்த் சிங்கை போலீசார் கைது செய்தனர். அதேவேளையில், அந்த இருவர் குடித்து விட்டு ரகளை செய்ததாகவும், இதன் காரணமாகவே பிரச்சனை ஏற்பட்டதாகவும் கைது செய்யப்பட்ட பல்வந்த் சிங் விளக்கமளித்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com