நரேந்திரமோடியே விமர்சித்ததால் செருப்பு அடி கொடுத்த பாஜக - திமுக வாய்கூட திறக்கவில்லை

இந்திய பிரதமர் மோடியை விமர்சனம் செய்த பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் புட்டோவை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழக பாரதிய ஜனதா கட்சி இளைஞரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம
நரேந்திரமோடியே விமர்சித்ததால் செருப்பு அடி கொடுத்த பாஜக  -  திமுக  வாய்கூட திறக்கவில்லை
Published on
Updated on
1 min read

பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர்பிலாவள் புட்டோவின் உருவப்படத்தை கிழித்து தீயிட்டு கொளுத்தியும் அமைச்சர் போன்று வேடமிட்ட நபரை செருப்பால் அடித்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர்  இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக பாஜக துணை தலைவர் கரு. நாகராஜன், தமிழக பாஜக இளைஞரணி தலைவர் சூர்யா ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது விழாவில் பிளாவள் புட்டோ  போன்று  முகமூடி அணிந்த நபரை கையில் இரும்பு சங்கிலியால் விளங்கிட்டு அழைத்து வந்தனர்.மேலும் அவரை மண்டியிட செய்து முகமூடியில் செருப்பால் அடித்தும் எதிர்ப்பை தெரிவித்தனர்.

இந்திய பிரதமர் மோடியை விமர்சனம் செய்த பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என கண்டன ஆர்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனர். மேலும் பாகிஸ்தான் தீவிரவாத நாடு எனவும் இந்தியாவைப் பற்றியும் இந்திய பிரதமர் பற்றியும் பேச அவர்களுக்கு அருகதை இல்லை எனவும் பாஜக நிர்வாகிகள் மேடையில் முழக்கம் எழுப்பினர்.

பாஜக துணை தலைவர்  கரு நாகராஜன் பேசியது

வங்கதேசத்தில் தோல்வியுற்ற 93 ஆயிரம் பாகிஸ்தானிய வீரர்கள் மண்டியிட்டதை மறந்து விட்டு தற்போது இந்திய பிரதமரை பாகிஸ்தான் விமர்சனம் செய்து வருகிறது அது கண்டனத்திற்கு உரியது என்றார்.

மாநில தலைவரின் அறிவுறுத்தலின்படி தமிழகத்தில் இன்று 20 க்கும் மேற்பட்ட இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாகவும், மேலும் பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பல்வேறு  ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட இருப்பதாகவும் தெரிவித்தார்.

சைதை துரைசாமி 

நேற்று பிரதமர் மோடியை பற்றி பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர் தரை குறைவாக பேசி உள்ளார். அதனை கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. 

பிரதமரை பற்றி தவறாக பேசி இருக்கும் நிலையில் முதலமைச்சர் என்ற முறையில் அதற்கு கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும் ஆனால் தற்போது வரையிலும் எதுவும் பேசாமல் இருக்கிறார் எனவும் சைதை துரைசாமி திமுக அரசை விமர்சித்தார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com