பின்னால் இருந்த பாஜக.... உண்மையை கூறிய ஷிண்டே!!!
உண்மையான சிவசேனா சர்ச்சையில் தேர்தல் ஆணையத்தின் முடிவை அமித்ஷாவும் வரவேற்றுள்ளார். புனேயில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், சத்யமேவ ஜெயதே என்ற வார்த்தை நேற்று நிஜமாகிவிட்டது என்று கூறியுள்ளார்.
எது உண்மையானது?:
கடந்த ஆண்டு சிவசேனாவில் ஏற்பட்ட பிளவுக்குப் பிறகு, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணிக்கு அக்கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை தேர்தல் ஆணையம் நேற்று வழங்கியுள்ளது. இதன் மூலம், மகாராஷ்டிராவில் கடந்த பல மாதங்களாக நீடித்து வந்த உண்மையான சிவசேனா எது என்பது முடிவுக்கு வந்துள்ளது.
இருப்பினும், தேர்தல் ஆணையத்தின் முடிவில் உத்தவ் தாக்கரே தரப்பினர் அதிருப்தியான நிலையில் உள்ளனர். சிவசேனாவின் பெயர் மற்றும் சின்னம் திருடப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஏக்நாத் ஷிண்டே கூறியதென்ன?:
சிவசேனாவின் ஆதரவான எம்எல்ஏக்களுடன் மகாராஷ்டிராவில் பாஜக ஆதரவுடன் ஆட்சி அமைத்தது குறித்து ஏக்நாத் ஷிண்டே வெளிப்படையாக பேசியுள்ளார். அமித் ஷா முன்னிலையில் அவரைப் பாராட்டிய ஷிண்டே, "அமித் ஷா ஜி என்னிடம் சொன்னார், ஷிண்டே ஜி நீங்கள் மேலே செல்லுங்கள்; நாங்கள் உங்கள் பின்னால் ஒரு பாறை போன்று துணை நிற்போம். அவர் கூறியதை ஷா ஜி செய்துள்ளார்" என்று பேசியுள்ளார்.
உத்தவ்வை கிண்டலடித்த அமித் ஷா:
உண்மையான சிவசேனா சர்ச்சையில் தேர்தல் ஆணையத்தின் முடிவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரவேற்றுள்ளார். புனேயில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ”சத்யமேவ ஜெயதே(வாய்மையே வெல்லும்)” என்ற வார்த்தை நேற்று நிஜமாகிவிட்டது” என்று கூறியுள்ளார்.
மேலும் “பாலை தண்ணீராக மாற்றிவிட்டது தேர்தல் ஆணையம். உண்மையான சிவசேனா என்ற நிலையையும் சின்னத்தையும் ஷிண்டேவின் சிவசேனா பெற்றுள்ளது. பொய்யைக் கூறிக் கத்திக் கொண்டிருந்தவர்கள், இன்று உண்மை யார் பக்கம் என்பது தெரிய வந்துள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.
-நப்பசலையார்