தொடர்ந்து 6 மாதமாக போராடும் விவசாயிகள்.! மோடி பிரதமராக பதவியேற்ற நாளை கருப்பு தினமாக அனுசரிப்பு.!  

தொடர்ந்து 6 மாதமாக போராடும் விவசாயிகள்.! மோடி பிரதமராக பதவியேற்ற நாளை கருப்பு தினமாக அனுசரிப்பு.!  
Published on
Updated on
1 min read

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் இன்று கருப்பு தினம் அனுசரிக்கின்றனர். 

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி முதல் டெல்லியில் அனைத்து எல்லைகளையும், முற்றுகையிட்டு விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

ஆனாலும் அவர்கள் போராட்டத்தை அரசு கவனத்தில்கொள்ளவில்லை, இந்நிலையில் மோடி அரசு பதவியேற்ற  7ம் ஆண்டான இன்றைய நாளை விவசாயிகள் கருப்பு தினமாக அனுசரித்து வருகிறார்கள். விவசாயிகளின் இந்த போராட்டத்துக்கு எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. 

அதன்படி நாடு முழுவதும் விவசாயிகள் தங்கள் வீடுகள், கடைகள், டிராக்டர்கள் மற்றும் வாகனங்களில் கருப்புக் கொடியை ஏற்றி வைத்துள்ளனர். மேலும் பல்வேறு கட்சி சார்பிலும் கருப்பு கொடிகள் ஏற்றப்பட்டு இன்றைய தினத்தை கருப்பு தினமாக அனுசரித்து வருகிறார்கள். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com