ஒரே நபரின் உடலில் கண்டறியப்பட்ட கருப்பு,வெள்ளை,மஞ்சள் பூஞ்சை தொற்று.! மருத்துவர் சொன்னது என்ன? 

ஒரே நபரின் உடலில் கண்டறியப்பட்ட கருப்பு,வெள்ளை,மஞ்சள்  பூஞ்சை தொற்று.! மருத்துவர் சொன்னது என்ன? 

கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் சற்று குறைந்துவரும் நிலையில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் பூஞ்சை நோய்களால் பாதிக்கப்பட்டு வரும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் பூஞ்சை நோய்களால் பாதிக்கப்படுபவர்கள் கண்பார்வை இழப்பை அதிகளவு சந்தித்தாலும் அந்த பாதிப்பு உயிரிழப்பை ஏற்படுத்தும் வரை செல்வது குறிப்பிடத்தக்கது. 

ஆரம்பத்தில் கருப்பு பூஞ்சை தொற்று மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அதன்பின் அதைவிட ஆபத்தான வெள்ளை பூஞ்சை தொற்று மனிதர்களுக்கு பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பின் இது இரண்டையும் விட அதிக பாதிப்பை ஏற்படுத்தும் மஞ்சள் பூஞ்சை தொற்றும் சிலரிடமிருந்து கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த தகவல் இந்தியா முழுவதும் கடும் பீதியை ஏற்படுத்தியது. மேலும் இதற்கான மருந்துகளை வெளிநாடுகளில் இருந்து வாங்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தின் காஜியாபாத் சஞ்சைநகரை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு 3 வித பூஞ்சை தொற்றும் ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. 

அதாவது அந்த நபரின் உடலில் கருப்பு,வெள்ளை,மஞ்சள் என மூன்று விதமான பூஞ்சை தொற்றுகளும் கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள மருத்துவர் ஒருவர், ஒருவருக்கு மூன்று விதமான பூஞ்சை தொற்றும் பரவியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது நாட்டிலேயே இது தான் முதல் முறை என தெரிவித்துள்ளார்.