முழு அடைப்பு போராட்டம்- பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

புதுச்சேரியில், ஆளும் கட்சிக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் நடத்தும் முழு அடைப்பு போராட்டத்தால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.  

முழு அடைப்பு போராட்டம்- பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

புதுச்சேரியில், ஆளும் கட்சிக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் நடத்தும் முழு அடைப்பு போராட்டத்தால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.  

புதுச்சேரியில் நவம்பர் 2, 7 மற்றும் 13 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில், தொகுதி மறு சீரமைப்பு, இட ஒதுக்கீடு, சுழற்சி முறையில் வார்டு தேர்வு உள்ளிட்ட பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்பினர் குற்றம் சாட்டி வந்தன. இதனைத் தொடந்து, குளறுபடிகளை சரி செய்த பின்னரே தேர்தலை நடத்த வேண்டும், மாநில தேர்தல் ஆணையரை மாற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆளும் என். ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக அரசுகளை கண்டித்து, காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இன்று முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

இதனால் புதுச்சேரியில் தனியார் பேருந்துகள் முழுவதுமாக இயக்கப்படவில்லை. அரசு பேருந்துகள் மற்றும் ஆட்டோக்கள் குறைந்த அளவிலேயே இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் 
முக்கிய வர்த்தக வீதிகளான நேரு வீதி, அண்ணா சாலை, காமராஜர் சாலை ஆகிய பகுதிகள் பொதுமக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது, அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் போலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.