காஷ்மீரின் தால் ஏரியில் படகு வீடு மூழ்கியது…உள்ளே இருந்தவர்கள் தப்பித்தது இப்படித் தான்!

காஷ்மீரின் தால் ஏரியில் படகு வீடு  மூழ்கியது…உள்ளே இருந்தவர்கள் தப்பித்தது இப்படித் தான்!

காஷ்மீரின் புகழ்பெற்ற சுற்றுலாத் தளங்களில் ஒன்று தால் ஏரி. அந்த ஏரியில் படகு சவாரி பிரபலமான ஒன்று. காஷ்மீருக்கு சுற்றுலா செல்லும் எவரும் தால் ஏரியில் படகு சவாரியை தவற விட மாட்டார்கள்.

இந்த தால் ஏரியில் படகு வீடுகளும் உள்ளன. சுற்றுலா வருபவர்கள் இதில் தங்கிச் செல்வது வழக்கம்.

முகமது யூசுஃப் என்பவருக்கு சொந்தமான படகு வீட்டில் இரண்டு குடும்பங்கள் மற்றும் ஏழு சுற்றுலாப் பயணிகள் தங்கியிருந்தனர். படகு திடீரென மூழ்கத் தொடங்கியதும் தனது குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து சுற்றுலாப் பயணிகளைப் வெளியேற்றி பாதுகாப்பான இடத்தில் அமர்த்தியுள்ளார். சுற்றுலாப் பயணிகளை பாதுகாப்பாக வெளியேற்றியதும் தனது குடும்ப உறுப்பினர்களையும் பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளார்.

இது குறித்து முகமது யூசுஃப் கூறுகையில் ”படகு வீடு மோசமாக பழுதடைந்துள்ளது. அதை சரி செய்வதற்கு அதிகாரிகளிடம் அனுமதி கேட்டிருந்தோம். ஆனால் அவர்கள் எந்த அனுமதியும் வழங்கவில்லை” எனக் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில் “தற்போது நாங்கள் வீடிழந்து தவிக்கிறோம். எங்கள் படகு வீடு கடுமையாக சேதமடைந்துள்ளது. அரசு தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்” இவ்வாறு அவர் கூறினார்.    

 - ஜோஸ்