ஒன்றிய அரசு என்று அழைக்கும் திமுக மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.! -புதுவை அதிமுக கோரிக்கை.! 

ஒன்றிய அரசு என்று அழைக்கும் திமுக மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.! -புதுவை அதிமுக கோரிக்கை.! 

மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைக்கும் திமுக மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் கூறியுள்ளார்.

புதுவை மாநிலத்தின் அதிமுக கிழக்கு மாநில செயலாளராக இருப்பவர் அன்பழகன். இவர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது பேசிய  இவர், தமிழகத்தில் 10 ஆண்டு வன வாசத்திற்கு பிறகு தற்போது ஆட்சியை பிடித்துள்ள திமுக இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிராக மக்கள் மத்தியில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைத்து வருகிறது என்று கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர் புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கும் போது இந்திய ஒன்றியத்தின் புதுச்சேரி ஆட்சி பரப்பு என கூறி பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதனை திமுக அரசியாக்குவது தவறு. எனவே மத்திய அரசு திமுக மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். 

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com