மருத்துவ உபகரண தொழில் பூங்கா அமைக்க மத்திய அரசு ரூ.100 கோடி ஒதுக்கீடு

காஞ்சிபுரம் மாவட்டம் ஓரகடத்தில், மருத்துவ உபகரண தொழில் பூங்கா அமைப்பதற்காக, மத்திய அரசு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, அனுமதி வழங்கியுள்ளது
மருத்துவ உபகரண தொழில் பூங்கா அமைக்க மத்திய அரசு ரூ.100 கோடி ஒதுக்கீடு

காஞ்சிபுரம் மாவட்டம் ஓரகடத்தில், மருத்துவ உபகரண தொழில் பூங்கா அமைப்பதற்காக, மத்திய அரசு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, அனுமதி வழங்கியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில், மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு பூங்கா அமைக்கப்படும் என்று சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஓரகடத்தில் 400 ஏக்கர் பரப்பளவில், மருத்துவ உபகரணங்கள் பூங்கா அமைப்பதற்கான, முதற்கட்ட பணிகள் துவங்கியுள்ளன. நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.  சென்னை மருத்துவ சுற்றுலா தலமாக இருப்பதால், இங்குள்ள மருத்துவமனைகளுக்கு தேவையான உபகரணங்களை தயாரித்து வழங்க ஏதுவாக, இந்த பூங்கா அமைக்க படுகிறது. 'பல்ஸ் ஆக்சிமீட்டர்' முதல் மருத்துவமனைகளுக்கு தேவையான, அனைத்து உபகரணங்களும் தயாரிப்பதற்கான வசதிகள், ஏற்படுத்திக் கொடுக்கப்பட உள்ளன. மேலும், மருத்துவ உபகரணங்களை வடிவமைக்கும் வசதிகளும் அமைகின்றன. இது தவிர, தொழிற்சாலைகள் துவங்க ஏதுவாக 'பிளக் அண்ட் பிளே' வசதியும் செய்து தரப்பட உள்ளது. இதற்கு மத்திய அரசு, முதற்கட்ட அனுமதி வழங்கி 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com