கொரோனா தடுப்பூசிகளுக்கு விலை  நிர்ணயம் செய்த ஒன்றிய அரசு!

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசிகளுக்கு விலை  நிர்ணயம் செய்து மத்திய அரசு  உத்தரவிட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசிகளுக்கு விலை  நிர்ணயம் செய்த ஒன்றிய அரசு!

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசிகளுக்கு விலை  நிர்ணயம் செய்து மத்திய அரசு  உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி அனைத்து  மாநிலங்களுக்கும் கொரோனா தடுப்பூசி  இலவசமாக வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார்.

இந்நிலையில் தனியார் மருத்துவமனைகளில் சேவைக்கட்டணத்துடன் கூடிய கொரோனா தடுப்பூசி விலைப்பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி கோவிஷீல்டு சேவை கட்டணத்துடன் 780 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கோவாக்சின்  தடுப்பூசி சேவை கட்டணத்துடன் 1410 ரூபாயாகவும், ஸ்புட்னிக்வி  சேவை கட்டணத்துடன் சேர்த்து 1145 ரூபாய்  எனவும் விலையை நிர்ணயித்து  மத்திய அரசு அறிவிப்பு  வெளியிட்டுள்ளது.