மக்களின் ஆசிர்வாதத்தை பெறும் வகையில் ஆசிர்வாத் யாத்திரையை தொடங்கவிருப்பதாக லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் பதவியிலிருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட சிராக் பாஸ்வான் அறிவித்துள்ளார். பீகாரில் லோக் ஜனசக்தியில் தற்போது உள்கட்சி பூசல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதனால் மக்களவையின் அதிருப்தி உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து சமீபத்தில் நாடாளுமன்ற கட்சித் தலைவரான சிராக் பஸ்வானை நீக்கிவிட்டு அவரது சித்தப்பாவான பசுபதி குமாரை நியமித்தனர். பின்னர் லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் பதவியிலிருந்தும் சிராக் பாஸ்வான் நீக்கப்பட்டார்.