வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை உயர்வு...!

வணிகப் பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டரின் விலை 203 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

மாதம் தோறும் ஒன்றாம் தேதி எரிவாயு சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன. அந்தவகையில் ஆகஸ்ட் மாத இறுதியில் முன் எப்போதும் இல்லாத வகையில் வீட்டு உபயோக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை 200 ரூபாய் குறைக்கப்பட்டது. தொடர்ந்து அடுத்த இரண்டு தினங்களில் செப்டம்பர் 1 ம் தேதி வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை மீண்டும் குறைக்கப்பட்டது.

இந்நிலையில், அக்டோபர் ஒன்றாம் தேதியான இன்று வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளன. அதன்படி, 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டு சிலிண்டரின் விலை 203 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று வரை ஆயிரத்து 695 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று முதல் ஆயிரத்து 898 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

இதேபோல், ஐந்து கிலோ சிலிண்டரின் விலையும் 49 ரூபாய் உயர்த்தப்பட்டு 544 ரூபாய் 50 பைசாவுக்கு விற்பனையாகவுள்ளன. 

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com