உ.பி. சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிடும் காங்கிரஸ்... மாஸ்டர் பிளான்...!

உத்தரப் பிரதேச சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
உ.பி. சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிடும் காங்கிரஸ்...  மாஸ்டர் பிளான்...!

உத்தரப் பிரதேச சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

உத்தர பிரதேசம் மாநிலத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதில் தனித்துப் போட்டியிடப் போவதாக சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை அறிவித்துள்ளன, இந்நிலையில், காங்கிரசின் நிலைப்பாடு குறித்து அம்மாநில காங்கிரஸ் தலைவர் அஜய்குமார் பேசுகையில், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி அமைக்காமல் தனித்துப் போட்டியிடும் திறன் காங்கிரசுக்கு இருப்பதாகவும். அந்தக் கட்சிகளை விட காங்கிரஸ்தான் உறுதியான எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். உத்தர பிரதேசத்தில் மாற்றத்துக்கான காற்று வீசி வருகிறது என குறிப்பிட்ட அவர், அந்த மாற்றத்தின் மூலம் 30 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி அமைப்போம் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com