ஊடகங்களுக்கு கட்டுப்பாடு விதிப்பது மக்களது சிந்தனைகளை கட்டுப்படுத்துவதற்கு சமம் ...! உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை...!!

ஊடகங்களுக்கு கட்டுப்பாடு விதிப்பது மக்களது சிந்தனைகளை கட்டுப்படுத்துவதற்கு சமம் ...! உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை...!!

ஊடகங்களுக்கு கட்டுப்பாடு விதிப்பது மக்களது சிந்தனைகளை கட்டுப்படுத்துவதற்கு சமம் என மீடியா ஒன் சேனல் வழக்கில் உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மீடியா ஒன் மலையாள சேனிலின் ஒளிபரப்பு உரிமையை ரத்து செய்த மத்திய அரசின் முடிவுக்குத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக மீடியா ஒன் தொலைக்காட்சி தேசபாதுகாப்புக்கு எதிராக செயல்படுவதாக கூறி மத்திய அரசு அதன் ஒளிபரப்புக்கு தடைவிதித்து சென்ற ஆண்டு உத்தரவிட்டது. 

இதனை எதிர்த்து தொலைக்காட்சி நிறுவனம் சார்பில் உச்சநீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவானது நேற்று உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இதில் "ஊடகங்கள் சுதந்திரமாக செயல்படுவது ஜனநாயதுக்கு முக்கியமானது. ஆளும் கட்சிக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் போது அவற்றை முடக்கக் கூடாது" என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் "ஊடகங்களுக்கு கட்டுப்பாடு விதிப்பது மக்களது சிந்தனைகளை கட்டுப்படுத்துவதற்கு சமம் எனவும் ஒரே மாதிரியான கருத்துக்களை வெளியிடுவது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது" என்றும் தெரிவித்தனர். 

மீடியா ஒன் தொலைக்காட்சி தடை செய்யப்பட்டதை நீக்கி உத்தரவிட்ட நீதிபதிகள்  தொலைக்காட்சி ஒளிபரப்பு தடை செய்யப்பட்டதற்கான காரணத்தை வெளிப்படையாக நீதிமன்றத்தில் தெரிவிக்காமல், சீலிடப்பட்ட உடையில் அளித்தது நீதிக்கு எதிரானது என்கண்டித்துள்ளனர்.    

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com