கொரோனா தொற்றானது எச்.ஐ.வி, காசநோய் போன்ற நோய்களின் மீது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக சர்வதேச நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2019 ஆம் ஆண்டு நிலவரப்படி எச்.ஐ.வி தடுப்பு மற்றும் சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை 11 சதவீதம் குறைந்ததாகவும், எச்.ஐ.வி பரிசோதனை செய்து கொள்வோரின் எண்ணிக்கையும் 22 சதவீதம் அளவுக்கு குறைந்திருந்ததாகவும் கூறப்பட்டுள்லது. ஆனால் 2020 ஆம் ஆண்டில் எச்.ஐ.வி- தாக்கத்தால் உயிர் காக்கும் ஆன்டிரெட்ரோ வைரல் சிகிச்சை பெற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 8.8 சதவீதம் அதிகரித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் காசநோய் தாக்கத்துக்கு உள்ளாவனர்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருப்பதாகவும், எச்.ஐ.வி, காசநோய்க்கு எதிரான போராட்டத்தில் கொரோனா பேரழிவை தரும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.