மகராஷ்டிரா மாநிலம் மும்பையில் கொரோனாவுக்கு பிந்தைய எலும்பு திசுக்கள் செயலிழப்பு நோயால் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா 2வது அலையிலிருந்து மீண்டவர்கள் பலர் கரும்பூஞ்சை உள்ளிட்ட பல்வேறு தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இதற்கு காரணம் தொற்றின் போது அவர்களுக்கு பயன்படுத்தப்பட்ட ஸ்டீராய்டு மருந்துகள் தான் என கூறப்படுகிறது. இந்தநிலையில் மும்பையில் புதிதாக 3 பேர் ஏவாஸ்குலார் நீக்ரோஸிஸ் என்ற தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். அதாவது போதுமான ரத்தம் ஓட்டம் இல்லாத காரணத்தால் எலும்புகளுடன் இணைந்திருக்கும் செல் திசுக்கள் உயிரிழக்க அல்லது செயலிழக்க நேர்ந்துள்ளதாக தெரிவிக்கின்றனர். இதற்கு அதிகப்படியான ஸ்டீராய்டு பயன்பாடே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பாதிப்பானது அடுத்த சில மாதங்களில் மேலும் பலருக்கு அதிகரிக்கக்கூடும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மியூகர்மைகோஸிஸ் என்ற கரும்பூஞ்சைக்கும் ஏவாஸ்குலார் நீக்ரோஸிஸ் என்ற தொற்றுக்கும் ஒரே ஒற்றுமை கொரோனாவுக்கான ஸ்டீராய்டு பயன்பாடு தான் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.