தடுப்பூசி போட்டதும் காந்த சக்தி பெற்ற மனிதர்.... அதிசயம் ஆனால் உண்மை!

தடுப்பூசி போட்டதும் காந்த சக்தி பெற்ற மனிதர்.... அதிசயம் ஆனால் உண்மை!

மகாராஷ்ரா மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்,கையில் தீடீரென இரும்பு பொருட்கள் எல்லாம் ஒட்டுக்கொண்டுள்ளாத தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனா தொற்றின் 2 வது அலை அதிகரித்து தற்போது குறைந்து வருகிறது .இதை தொடர்ந்து  கொரோனா தொற்றின்  மூன்றாவது அலை ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவை கட்டுப்படுத்த அனைவரும் தடுப்பூசி செலுத்த அரசு வழியுறுத்தியுள்ளது.மேலும் நாடு முழுவது தடுப்பூசி செலுத்தும் பணி துரிதமாக நடைபெற்றுவருகிறது.

மகாராஷ்ரா மாநிலம் நாசிக் நகரில் 71 வயதான அரவிந்த்  சோனார் என்பவர்  வசித்து வருகிறார். இவர் கடந்த மார்ச் 6 ஆம் தேதி கொகோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளார். அதன்பின் கடந்த 2 ஆம் தேதி 2வது டோஸ் செலுத்துக் கொண்டுள்ளார்.

இந்த நிலையில் கொரோனா  தடுப்பூசி போட்ட அரவிந்த சோனர் கையில் தீடீரென இரும்பு பொருட்கள் எல்லாம் ஒட்டுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியானது. தனியார் மருத்துவமனையில் ஒரு டோஸையும், அரசு மருத்துவமனையில் ஒரு டோஸையும் செலுத்திக் கொண்டார். உடலில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை பற்றி தனியார் மருத்துவமனையில் அவரது மகன் தகவல் தெரிவித்தார்.

இது உண்மைதானா? இப்படி ஏற்படுவதற்கு காரணம் என்ன என்பது குறித்து ஆய்வு செய்தனர். இதுவரை அப்பகுதியில் லட்சகனக்கானோர்  பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். ஆனால் இது  மாதிரி யாருக்கும் ஏற்படவில்லை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

 உடலில் இரும்பு பொருட்கள் ஓட்டுவது என்பது கவனிக்கப்பட வேண்டியது ஒன்றுதான்..இப்படி இரும்பு பொருட்கள் மட்டுமே ஒட்ட என்ன காரணம் என்பதை கண்டறிய வேண்டும்.அதை பற்றி ஆய்வு செய்துதான் தெரிந்துக் கொள்ள வேண்டும். ஆனால் தடுப்பூசிக்கும் இதற்கு எந்த சம்மந்தமும் இருக்காது என தெரிவித்துள்ளனர்.