உத்திரபிரதேசத்தில் கங்கை நதியில் மீண்டும் பிணங்கள் மிதப்பது அதிகரித்துள்ளது.
சில வாரங்களுக்கு முன் கங்கை நதியில் பிணங்கள் மிதந்து வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், கங்கை நதிக்கரையில் ஏராளமாக பிணங்கள் புதைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது பெரும் சர்ச்சை கிளப்ப கங்கை நதியில் மிதக்கும் பிணங்களை அகற்றி தகனம் செய்ய உத்திரபிரதேச அரசு உத்தரவிட்டது. மேலும் கங்கை நதியில் பிணங்கள் வீசப்படுவதை தடுக்கும் பொருட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் தற்போது பருவமழை காரணமாக கங்கை நதியில் நீர்மட்டம் உயர்ந்திருப்பதை தொடர்ந்து மீண்டும் பிணங்கள் மிதப்பது அதிகரித்துள்ளது. கங்கை நதிகரையில் மணலில் புதைக்கப்பட்டிருந்த பிணங்கள் நீர்மட்டம் உயர்வதால் வெளியேறி நதியில் மிதப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இது பெரும் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தியுள்ளது.