கோவாக்சின் மட்டுமல்ல, கோவிஷீல்ட் போட்டாலும் ஐரோப்பாவுக்கு செல்ல முடியாது,.! வெளிவந்த அதிர்ச்சி தகவல்.! 

கோவாக்சின் மட்டுமல்ல, கோவிஷீல்ட் போட்டாலும் ஐரோப்பாவுக்கு செல்ல முடியாது,.! வெளிவந்த அதிர்ச்சி தகவல்.! 

கோவிஷீல்ட், கோவாக்சின் தடுப்பூசி செலுத்தியவர்கள் அளிக்கும் சான்றிதலை ஏற்கமுடியாது என்று ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளது. 

கொரோனா வைரஸ் தற்போது படிப்படியாக குறைந்துவரும் நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தைச்ச் சேர்ந்த மக்கள் பயணம் செய்ய க்ரீன் பாஸ் திட்டத்தை ஐரோப்பிய ஒன்றியம் ஜூலை 1-ம் தேதி முதல் செயல்படுத்தியுள்ளது.

இந்த திட்டத்தின் படி ஐரோப்பிய ஒன்றியம் அல்லது அதன் உறுப்பு நாடுகள் அனுமதியளித்த கொரோனா தடுப்பூசி சான்றிதழ்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்றும், பிற நாடுகளைச் சேர்ந்த மக்கள் அவர்கள் நாட்டில் வேறு தடுப்பூசிகளை செலுத்தி அதற்கான சான்றிதழ் வாங்கியிருந்தாலும் அதை அங்கீகரிக்காமல், அவர்கள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு வந்தால் அவர்களை கட்டாயத் தனிமைக்கு உட்படுத்தப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம்  ஃபைஸர், பயோஎன்டெக், மாடர்னா, வேக்ஸ்ஜெர்வியா(அஸ்ட்ராஜென்கா), ஜான்ஸன்& ஜான்ஸன் ஆகிய 4 தடுப்பூசிகளுக்கு மட்டுமே அனுமதியளித்துள்ளது. இதன் காரணமாக இந்தியாவில்  கோவிஷீல்ட், கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளை போட்டவர்களும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு செல்லமுடியாத நிலை இருக்கிறது. அப்படியே சென்றாலும் அங்கு கட்டாயத் தனிமைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com