சிங்கத்திற்கு பதிலாக கோல்டன் ரெட்ரீவர் என்ற நாய் வகையை விமர்சகர்கள் விரும்புகிறார்கள்-இசைக்கலைஞர் ரிக்கி கேஜ்

சிங்கத்திற்கு பதிலாக கோல்டன் ரெட்ரீவர் என்ற நாய் வகையை விமர்சகர்கள் விரும்புகிறார்கள்-இசைக்கலைஞர் ரிக்கி கேஜ்

சிங்கத்திற்கு பதிலாக கோல்டன் ரெட்ரீவர் என்ற நாய் வகையை விமர்சகர்கள் விரும்புகிறார்கள்-தேசிய சின்னம் சர்ச்சையில் கிராமி விருது பெற்ற இசைக்கலைஞர் ரிக்கி கேஜ்

சிங்கம் அதன் அனைத்து மகிமையுடனும், பெருமையுடனும் சித்தரிக்கப்பட வேண்டும் எனவும்  நாடாளுமன்ற கட்டிடத்தின் உச்சியில் உள்ள தேசிய சின்னத்தினை விமர்சிப்பவர்களுக்கு  விலங்குகளின் அடிப்படை நடத்தை பற்றி கூட தெரியவில்லை எனவும், கிராமி விருது பெற்ற இசைக்கலைஞர் ரிக்கி கேஜ் ட்வீட் செய்துள்ளார். 

ரிக்கி கேஜ் என்பவர் பெங்களூருவை சேர்ந்த பல கிராமி விருதுகளை வென்ற இசையமைப்பாளர் ஆவார். தேசிய சின்னம் குறித்த சர்ச்சையில் விமர்சகர்கள் சிங்கத்திற்கு பதிலாக கோல்டன் ரெட்ரீவரை விரும்பியிருக்கலாம் என்று விமர்சித்துள்ளார்.  அவருக்கும் கோல்டன் ரெட்ரீவர்ஸ் மிகவும் பிடிக்கும் என்றும் ஆனால் அது இந்தியாவின் தேசிய சின்னம் அல்ல என்றும் புது டெல்லியில் உள்ள புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் உச்சியில் உள்ள புதிய சின்னத்தின் மீதான விமர்சனங்களுக்கு ட்வீட் செய்துள்ளார்.  

இந்தச் சிலையை விமர்சிப்பவர்கள் கர்ஜிக்கும் மற்றும்  கோபமான அல்லது பயங்கரமான மிருகங்களுக்கு எதிரானவர்கள் எனவும்  சிங்கங்களின் கர்ஜனையைப் பற்றி தெரியாதவர்கள் எனவும் மேலும் விலங்குகளின் அடிப்படை நடத்தை பற்றி கூட தெரியாதவர்கள் எனவும் கூறியுளார்.  மேலும் சிங்க கர்ஜனைக்கு பல காரணங்களும், அதற்கு பெரிய அடையாளங்களும் உள்ளன என்றும் ரிக்கி கேஜ் ட்வீட் செய்துள்ளார்.