கார்த்திகை மாதம் என்றாலே சபரி மலைக்கு பக்தர்கள் தயாராவது தான் அனைவருக்கும் நினைவு வரும். கன்னி சாமி, கருப்பு சட்டை, மாலை, இரு முடி, கருப்பு திருநீரு என பார்ப்பதகே பக்தி மயமாக இருக்கும் பக்தர்கள் பல இடங்களில் இருந்து கேரள மாநிலத்தில் இருக்கும் சபரி மலைக்கு ஒரு மண்டலம் அதாவது 48 நாட்களுக்கு விரதம் இருந்து, ஐயப்பனை தரிசனம் செய்வர்.
மேலும் படிக்க | சபரிமலை கோவில் : 24 நாட்களில் இவ்வளவு வருமானமா...?
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா அச்சுறுத்தலால் பெரியளவில் கூட்டமில்லாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது இந்தாண்டு கார்த்திகை மாதத்திற்காக கடந்த நவம்பர் 16ம் தேதி முதல் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வரத் துவங்கி விட்டனர்.
இதனைத் தொடர்ந்து, இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெரும் கூட்டம் இருப்பதால், கூட்ட நெரிசல் நாளுக்கு நாள் அதிகமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சுமார் 8 முதல் 10 மணி நேரம் வரை, சன்னிதானம் முதல் பம்பை வரை கூட பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்வதால் கடும் அவதி உருவாகியுள்ளது.
எனவே பக்தர்களின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலைக் குறைக்கவும், நடை திறப்பு நேரம் தேவஸ்தானத்தில் மாற்றப்பட்டுள்ளது.
அதன்படி, அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.
பிறகு மாலை 4 மணிக்கு நடை திறப்பதை ஒரு மணிநேரத்திற்கு முன்னதாக பிற்பகல் 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 11 மணிக்கு நடை அடைக்கக்கப்பட்டது.
அதிலும், ஞாயிற்றுக்கிழமை அதிக கூட்டம் இருப்பதால், நேற்று முதல் இந்த மாற்றம் செயல்பட்டு வருகிறது. அதிலும், நேற்றிரவு 11:30 மணி வரை பக்தர்களுக்காக சன்னிந்தானம் நடை திறக்கப்பட்டிருந்தது. சுமார் 1 லட்சம் பக்தர்கள் ஒவ்வொரு நாளும் சன்னிதானம் வந்தடைவதால், தேவஸ்தானம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.