கொரோனா நோயாளி பிணத்திடம் நர்ஸ் செய்த பகீர் சம்பவம்!!

கொரோனா நோயாளி பிணத்திடம் நர்ஸ் செய்த பகீர் சம்பவம்!!

கொரோனா நோயாளிகளை ஏறெடுத்துக்கூட பார்க்கவில்லை என்று சில நோயாளிகளின் உறவினர்கள் புகார் கூறி வரும் நிலையில், வடமாநிலத்தை சேர்ந்த நர்ஸ் ஒருவர் செந்த பகீர் சம்பவர் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. 

இந்தியாவில் கொரோனா 2வது அலை மிகமோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. தொற்று எண்ணிக்கை ஒருபக்கம் இருந்தாலும், அதனால் இறக்கக்கூடியவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிறது.. அவர்களை அடக்கம் செய்ய கூட முடியாத அவலம் ஏற்பட்டு வருகிறது.

இருப்பினும் டாக்டர்கள், நர்ஸ்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அவர்களது பணி அர்ப்பணிப்பை பலர் போற்றி பாராட்டி வருகின்றனர். ஆனால் ஒரு சிலர் இந்த இக்கட்டான நிலையையும் பயன்படுத்தி ஆதாயம் தேடும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அண்மையில் வடமாநிலங்களில் உள்ள குறிப்பிட்ட சில மருத்துவமனைகளில் மருத்துவர்கள் சிலர் உயிர் காக்கும் ரெம்டெசிவிர் மருந்தினை பதுக்கி கள்ளச்சந்தையில் விற்றதாக கைது செய்யப்பட்டனர். 
இந்த அதிர்ச்சி ஒருபக்கம் இருக்க, அண்மையில் உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் நடந்த சம்பவம் பகீர் கிளப்பியுள்ளது.

டேராடூனில் உள்ள மருத்துவமனையில் ஒன்று கொரோனா நோயாளி சிகிச்சை பெற்று வந்த நிலையில் அண்மையில் உயிரிழந்தார். ஆனால் அவரது மகன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதில் தனது தந்தை பயன்படுத்திய செல்போனை காணவில்லை என்றும், அதனை சல்மான் அகமது என்பவர் பயன்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார். 

அதைத்தொடர்ந்து அந்த நபரை அழைத்து விசாரித்த போது, தனது காதலியான 21வயது நர்ஸ் இதனை பரிசளித்ததாக கூறியுள்ளார். 

இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்த நிலையில், கொரோனா நோயாளி இறந்ததும் அவரது செல்போனை திருடியதாக நர்ஸ் ஒப்புக்கொண்டார். அதுமட்டுமல்லாது மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் மருந்தினையும் திருடியதாக கூறியுள்ளார். 

இருப்பினும் அதனை மருத்துவ நிர்வாகம் மறுத்துள்ளது. சம்பந்தப்பட்டவர் குற்றத்தை ஒப்புக்கொண்டபோதும், மருத்துவமனை இதனை மறுப்பதற்கான காரணம் என்ன என அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர். 

செத்து போன நோயாளியிடம் இருந்து செல்போனை திருடும் இவர்களை போன்றோர், ஏன் பணத்துக்காக உயிரை கூட கொல்ல மாட்டார்கள்? என்ற அச்சம் தான் தற்போது மக்களிடம் நிலவுகிறது.