குரங்கு அம்மை அறிகுறிகளுடன் வரும் விமான பயணிகளை LNJP மருத்துவமனைக்கு அனுப்ப டெல்லி அரசு முடிவு:

இந்தியாவில் நான்காவது குரங்கு அம்மை பாதிக்கப்பட்டவர் கண்டறியப்பட்ட நிலையில், அறிகுறிகளுடன் வரும் விமான பயணிகளை, LNJP மருத்துவமனைக்கு அனுப்ப முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குரங்கு அம்மை  அறிகுறிகளுடன் வரும் விமான பயணிகளை LNJP மருத்துவமனைக்கு அனுப்ப டெல்லி அரசு முடிவு:

குரங்கு அம்மை குறித்து தற்போது க்ளோபல் எமெர்கென்சி யாகக் கருதப்பட்ட நிலையில், அதற்கான எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இந்தியாவில், தற்போது நான்காவது குரங்கு அம்மைக் கண்டறியப்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் தலைநகர் டெல்லியில் பலத்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டு வருகிறது.

துறைமுகங்கள், விமான நிலையங்கள் என இந்தியாவின் அனைத்து இடங்களிலும், தொடர் எச்சரிக்கையுடன் சோதனை நடத்தப்பட்டு வரும் நிலையில், டெல்லி விமான நிலையத்தில் இருந்து வரும் அனைத்து வெளிநாட்டுப் பயணிகளையும் சோதித்து, அதில் குரங்கு அம்மைக்கான அறிகுறிகளுடன் வருப்வர்களை உடனடியாக LNJP மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.

குரங்கு அம்மைக் காய்ச்சலின் அறிகுறிகளான, அதிக காய்ச்சல், முதுகு வலி மற்றும் மூட்டு வலி போன்றவற்றைக் கொண்ட பயணிகள் LNJP மருத்துவமனையில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட வார்டுக்கு அனுப்பப்படுவார்கள், அத்தகைய நோயாளிகளைக் கையாள்வதற்காக 20 பேர் கொண்ட சிறப்புக் குழு உள்ளது.

சந்தேகத்திற்கிடமான நோயாளிகளின் மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு அனுப்பப்படும், அதே நேரத்தில் மாவட்ட நிர்வாகம் குடும்ப உறுப்பினர்களை தனிமைப்படுத்தி, அத்தகைய சந்தேகத்திற்கிடமான நோயாளிகளின் தொடர்பைக் கண்டறியும்.

டெல்லியில் குரங்கு காய்ச்சலின் முதல் வழக்கு கண்டறியப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு, திங்கள்கிழமை டெல்லி லெப்டினன்ட் கவர்னர் வி.கே.சக்சேனா தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது எனத் தகவல்கள் கூறுகின்றன.

டெல்லியில் முதன்முதலில் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மேற்கு டெல்லியைச் சேர்ந்த 34 வயது நபர் ஒருவருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. தற்போது LNJP மருத்துவமனையில் உள்ள அவர் முழுமையாக குணமடைய குறைந்தது ஒரு வாரமாவது ஆகும். இந்த மருத்துவமனை தான் கொரோனா காலத்தில் மையமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com