டெல்லி கமிஷனராக ராகேஷ் அஸ்தானா நியமன எதிர்ப்பு வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு!

டெல்லி போலீஸ் கமிஷனராக மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரி ராகேஷ் அஸ்தானா நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்கில் பதிலளிக்க, மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது.
டெல்லி கமிஷனராக ராகேஷ் அஸ்தானா நியமன எதிர்ப்பு வழக்கு:  மத்திய அரசு பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு!
Published on
Updated on
1 min read

டெல்லி போலீஸ் கமிஷனராக மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரி ராகேஷ் அஸ்தானா நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்கில் பதிலளிக்க, மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது.

முன்னாள் சி.பி.ஐ., சிறப்பு இயக்குனராகவும், பின் எல்லை பாதுகாப்பு படையில் இயக்குனர் ஜெனரலாகவும் இருந்த ராகேஷ் அஸ்தானாவை, மத்திய உள்துறை அமைச்சகம், டெல்லி போலீஸ் கமிஷனராக நியமித்து, கடந்த ஜூலை 17ல் உத்தரவு பிறப்பித்தது.
பதவி ஓய்வு பெறுவதற்கு நான்கு நாட்களே இருந்த நிலையில், அவர் இந்தப் பதவியில். நியமிக்கப்பட்டதை எதிர்த்தும், அவருடைய பணிக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதை எதிர்த்தும் வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், டெல்லி உயர் நீதிமன்றத்தில், சதர் ஆலம் என்ற வழக்கறிஞர் பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார். இதற்கு பதிலளிக்க மத்திய அரசு சார்பில் கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டது. அதை ஏற்று, வழக்கை 16ம் தேதிக்கு உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்து உள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com