ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிக்கு இந்தியாவில் அனுமதி மறுப்பு.,தேசிய மருந்து ஒழுங்குமுறை அமைப்பு அறிவிப்பு.! 

ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிக்கு இந்தியாவில் அனுமதி மறுப்பு.,தேசிய மருந்து ஒழுங்குமுறை அமைப்பு அறிவிப்பு.! 

ரஷ்யாவின் ஸ்புட்னிக் லைட் கொரோனா தடுப்பூசியின் 3-வது கட்ட பரிசோதனைகளை, இந்தியாவில் நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

கொரோனா வைரசுக்கு எதிராக ரஷ்யா தயாரித்துள்ள ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியின் செயல் திறன் 80 சதவீதமாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவில் இந்த மருந்தின் முதல் மற்றும் 2-ம் கட்ட பரிசோதனை நடத்தப்பட்டிருந்த நிலையில், 3-ம் கட்ட பரிசோதனையை நடத்துவதற்கு, ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் மருத்துவர் ரெட்டி ஆய்வக நிறுவனம் அனுமதி கோரியிருந்தது.  

ஆனால் அதற்கு தேசிய மருந்து ஒழுங்குமுறை அமைப்பு அனுமதி மறுத்துள்ளது. ஒரு முறை மட்டும் செலுத்தப்படும் இந்த கொரோனா தடுப்பூசிக்கு, முதல் மற்றும் 2-ம் பரிசோதனை அறிக்கையில் வெவ்வேறு மாதிரியான முடிவுகள் வந்திருப்பதாக கூறி, அனுமதி மறுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.