உலக பாரம்பரிய பட்டியலில் இடம்பிடித்த தோலவிரா...

யுனெஸ்கோ உலக பாரம்பரிய இடங்கள் பட்டியலில் குஜராத் மாநிலத்தின் தோலவிரா இடம்பிடித்துள்ளது. 
உலக பாரம்பரிய பட்டியலில் இடம்பிடித்த தோலவிரா...
உலகின் மிகப் பழமையான நாகரிகமாக சிந்துசமவெளி நாகரிகம் போற்றப்படுகிறது. இந்த நிலையில் சிந்து சமவெளி நாகரிக மக்களின் வாழ்விடங்களில் ஒன்றான குஜராத்தின் தோலவிரா தற்போது யுனெஸ்கோவினால் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் யுனெஸ்கோ உலக பாரம்பரிய இடங்கள் பட்டியலில் தோலவிரா 40வது இடத்தை பிடித்துள்ளது.
இதற்கு மகிழ்ச்சி தெரிவித்து பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், யுனெஸ்கோ பட்டியலில் தோலவிரா இடம் பிடித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தோலவிரா ஒரு முக்கியமான நகர மையமாக இருந்தது, இது நமது கடந்த காலத்துடனான மிக முக்கியமான இணைப்புகளில் ஒன்றாகும். இது வரலாறு, கலாச்சாரம் மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியில் ஆர்வமுள்ளவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய இடமாகும்” என்று பதிவிட்டுள்ளார்.
logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com