பேரிடர் கால முன்னெச்சரிக்கை... வாலண்டியர்களுக்கு நீச்சல் பயிற்சி...

காரைக்காலில் பேரிடர் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தன்னார்வலர்களுக்கு நீச்சல் பயிற்சி வழங்கப்பட்டது.
பேரிடர் கால முன்னெச்சரிக்கை... வாலண்டியர்களுக்கு நீச்சல் பயிற்சி...

காரைக்கால் மாவட்ட பேரிடர் மேலாண்மை துறை சார்பில் பேரிடர் கால நண்பன் எனும் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் நூறு தன்னார்வலர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பேரிடர் காலத்தில் ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக தண்ணீரில் மாட்டிக் கொண்டவர்களை காப்பாற்றும் வகையில் தன்னார்வலர்களுக்கு நீச்சல் பயிற்சி மற்றும் தண்ணீரில் சிக்கிக் கொண்டவர்களை காப்பாற்றும் பயிற்சிகள் தனியார் தொண்டு நிறுவனத்தின் சார்பில் இன்று காரைக்கால் அரசலாற்றில் அளிக்கப்பட்டது.

இதனை காரைக்கால் மாவட்ட ஆட்சியர் முகமது மன்சூர் துவங்கி வைத்தார். பேரிடர் மேலாண்மை துறை துணை ஆட்சியர் பாஸ்கர் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சத்யசாய் தொண்டு நிறுவன பயிற்சியாளர்கள் பேரிடர் கால நண்பன் தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளித்தனர்.

பயிற்சி என்பது பல்வேறு பாதுகாப்பு சாதனங்கள் பயன்படுத்தப்பட்டது இருந்த போதிலும் காலி தண்ணீர் பாட்டிலையும் பிளாஸ்டிக் பையையும் கொண்டு புதிய விதமான லைஃப் ஜாக்கெட் தயாரித்து காண்பிக்கப்பட்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com