"தமிழ் நாட்டிற்கு தண்ணீர் திறக்க முடியாது" டி.கே.சிவக்குமார்!

Published on
Updated on
1 min read

கர்நாடக அணைகளுக்கான நீர்வரத்து குறைவாக இருப்பதால் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க முடியாது என அம்மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். 

காவிரி ஒழுங்காற்று குழுவின் 89-வது கூட்டம் டெல்லியில் காணொலி வாயிலாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு தொழில்நுட்பக்குழு தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, தமிழ்நாட்டிற்கு நவம்பர் ஒன்றாம் தேதிமுதல் 15 நாட்களுக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 600 கனஅடி நீர் திறக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


பெங்களூரில்  செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், அணைகளில் உள்ள நீர் இருப்பு, குடிநீருக்கு மட்டுமே போதுமானதாக இருப்பதாக  கூறியுள்ளார். 

மேலும், கர்நாடக அணைகளில் மொத்தம் 551 டி.எம்.சி., தண்ணீர் மட்டுமே உள்ளதால் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க முடியாது என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார். 

இது டெல்டா மாவட்ட விவசாயிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com