ரேஷன் கடைகளை திறக்கக் கோரி திமுகவினர் போராட்டம்!

, ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள நிலுவை சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ரேஷன் கடைகளை திறக்கக் கோரி திமுகவினர் போராட்டம்!

புதுச்சேரியில் மூடப்பட்டுள்ள ரேஷன் கடைகளை திறக்க வலியுறுத்தி குடிமை பொருள் வழங்கல் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ரேஷன் கடைகளை திறக்கக் கோரிக்கை

மூடப்பட்டுள்ள ரேஷன் கடைகளை திறக்க வேண்டும், ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள நிலுவை சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு அத்தியாவசிய ரேஷன் பொருட்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

திமுக போராட்டம்

இந்தப் போராட்டத்திற்கு எதிர்கட்சித் தலைவர் சிவா தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட திமுகவினர் திரண்டனர்  உள்ள குடிமை பொருள் வழங்கல் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது காவல்துறையினர் அவர்களை தடுப்புகள் அமைத்து தடுத்து நிறுத்தியதால் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சித் தலைவர் சிவா, சட்டமன்ற உறுப்பினர்கள் செந்தில்குமார், சம்பத் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர.