தெலுங்கானாவில் முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. தெலுங்கானாவின் சட்டமன்றத்தில் 3 பாஜக எம்.எல்.ஏக்கள் இடம்பெற்றுள்ளனர்.
டெல்லியில் சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் ஒரு பகுதியாக புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்குப் பிரதமர் மோடி கடந்த 2020ம் ஆண்டு அடிக்கல் நாட்டினார். புதிய நாடாளுமன்ற கட்டடம் இந்த மாதம் 8ம் தேதி பிரதமர் மோடி அவர்களால் திறக்கப்பட்டது.
தெலுங்கானாவில் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் புதிதாக திறக்கப்பட்ட நாடாளுமன்ற வளாகத்திற்கு இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் டாக்டர் அம்பேத்காரின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது. இதற்கான தீர்மானமும் அனவராலும் முழு மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
தெலுங்கானா சட்டப்பேரவையில் தீர்மானம் பரிந்துரையின் போது பாஜக அதனுடைய நிலைப்பாட்டை தெரிவிக்காமல் ஒதுங்கியே இருந்தது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தீர்மானம் நிறவேற்றப்படும் போது பாஜக உறுப்பினர்கள் பங்கேற்காமல் இருந்தது கண்டனத்துக்குரியது எனவும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் போது பாஜக ஒதுங்கியிருந்ததைக் கண்டித்து ஹைதராபாத்தில் பட்டியல் இன மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தீர்மானத்தில் பங்கேற்ற காங்கிரஸுக்கு தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்திற்கு அம்பேத்கார் பெயரை சூட்டுவதற்கான கோரிக்கை அனைத்து மாநிலங்களின் சட்டமன்றங்களிலும் நிறைவேற்றப்பட வேண்டும் என தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி சார்பில் அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.